Thursday, September 24

Tag: maanaadu

அசுரவேகத்தில் நடைபெறும் ‘மாநாடு’ படப்பிடிப்பு!

அசுரவேகத்தில் நடைபெறும் ‘மாநாடு’ படப்பிடிப்பு!

News
சுரேஷ் காமாட்சியின் ‘வி’ ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சிலம்பரசன் நடித்துவரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு, தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு காட்சிகளை படமாகும் வேகமும் அதற்கு கொஞ்சமும் சளைக்காமல் ஈடுகொடுக்கும் சிலம்பரசனின் ஒத்துழைப்பும் படக்குழுவினரை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. குறிப்பாக புதிய சிலம்பரசனை இந்தப்படப்பிடிப்பில் பார்க்க முடிவதாக படக்குழுவினர் சிலாகிக்கின்றனர். இதேவேகத்தில் சென்றால், ஏற்கனவே திட்டமிட்ட நாட்களுக்கு முன்பாகவே படப்பிடிப்பு முடிவடைவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது, இந்தநிலையில், தற்போது ‘மாநாடு’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அப்துல் காலிக் என்கிற பெயரில் இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிலம்பரசனின் தோற்றமே படத்தின் மீதான எதிர்பா...

சபாஷ் மாநாடு படக்குழு – சித்த மருத்துவர் வீரபாபுவிடம் படக்குழுவினரின் பாதுகாப்பை ஒப்படைத்த தயாரிப்பாளர்!

News
அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் ஆகிய படங்களை தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் மாநாடு. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் TR, எஸ் ஜே சூர்யா, இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் எஸ் ஏ சி, ஒய் ஜி மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ். கே. பாரதி, பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துவரும் இந்தப்படம் மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை கே.எல்.பிரவீண் மேற்கொள்கிறார். கலை இயக்குநராக உமேஷ் பணியாற்றுகிறார். ஏற்கனவே சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக படப்பிடிப்ப...
சிம்பு  நடிக்கும் ‘மாநாடு’ படப்பிடிப்பு மலேசியாவில் துவங்குகிறது!

சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படப்பிடிப்பு மலேசியாவில் துவங்குகிறது!

News
அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக மிக அவசரம் என்கிற படத்தை தயாரித்துள்ளது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதையடுத்து வெங்கட் பிரபு டைரக்சனில் சிம்பு நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த நிறுவனம் தயாரிக்கிறது.   கதாநாயகியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார்.. இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் இடம்பெறுகின்றனர்.. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.   முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் அதிரடி அரசியல் படமாக இந்தப்படம் உருவாகிறது. சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.   இந்த படம் அறிவிக்கப்பட்டு பல...