சுரேஷ் காமாட்சி மாதிரி தயாரிப்பாளர் கிடைக்க என்ன தவம் செய்தாரோ சிம்பு!
சிம்பு என்கிற சிலம்பரசன் என்கிற எஸ்.டி.ஆரின் அத்தனை மைனஸ் பாயிண்டுகளையும் மறந்து அவரை வைத்து மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்திருக்கிறார் சுரேஷ் காமாட்சி!
இதற்கு சிம்பு செய்த கைமாறு வெற்றி விழாவுக்கு வராமல் இருந்ததா?
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவ-25ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், டேனி, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 25வது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த படத்தின் நன்றி தெர...
