Tuesday, September 1

Tag: ‘Maayon

அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்ற ‘மாயோன்’!

அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்ற ‘மாயோன்’!

News
டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழிமாணிக்கம் தயாரிப்பில், சிபி சத்யராஜ் நடிப்பில் வெளியான 'மாயோன்' திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்று வணிகரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியை பெற்றிருக்கிறது. இதனை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதன் போது படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் கிஷோருக்கு, படத்தின் நாயகனான சிபிராஜ் தங்கசங்கிலியொன்றை பரிசளித்தார். தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து, பலத்த போட்டிகளுக்கு இடையே வெளியான திரைப்படம் 'மாயோன்'. எளிதில் யூகிக்க இயலாத திரைக்கதை, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பரிபூரண ஒத்துழைப்பு, ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைக்கும் வகையில் வித்தியாசமான விளம்பர உத்தி, திரையலக பிரபலங்களின் பாரட்டு.. என பலவித அம்சங்களால் 'மாயோன்' திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. தமிழகம் முழுவதும் ‘மாய...
ரசிகர்களை வியக்கவைத்த ‘ரோஹிணி’யின் ‘மாயோன்’ பட கட்அவுட்!

ரசிகர்களை வியக்கவைத்த ‘ரோஹிணி’யின் ‘மாயோன்’ பட கட்அவுட்!

News
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'மாயோன்' திரைப்படத்தைப் பற்றி திரையுலக ஆர்வலர்கள், ரசிகர்கள் என பலரும் நேர்மறையான விமர்சனங்களைத் தெரிவித்ததால், பொது விடுமுறை தினமான ஞாயிறன்று சென்னையிலுள்ள ரோஹிணி திரையரங்கத்திற்கு இப்படத்தைக் காண அதிகளவிலான ரசிகர்கள் சென்றனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த கிருஷ்ண பகவானின் பிரம்மாண்டமான கட்அவுட்டிற்கு அருகே சில குழந்தைகள் கிருஷ்ணனின் வேடத்தை அணிந்து, வருகைத்தந்த ரசிகர்களை உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பாக இப்படத்தைக் காண வந்த ரசிகர்கள் சிலர் பேசுகையில்,“இன்று விடுமுறை தினம் என்பதால் சென்னையிலுள்ள ரோஹிணி திரையரங்கத்தில் திரையிடப்பட்டிருக்கும் ‘மாயோன்’ படத்தைக் கண்டு ரசிக்க எங்கள் குடும்பத்துடன் வருகைத்தந்தோம். இங்கு வந்தபிறகு இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கிருஷ்ண பகவானின் கட்அவுட்டிற்கு சிலர் பாலாபிசேகம் செய்ததைப் பார...
தெலுங்கில் படத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிடப்படும் ‘மாயோன்’!

தெலுங்கில் படத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிடப்படும் ‘மாயோன்’!

News
  தமிழகத்தில் மாயோன் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கில் படத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர். தமிழ் சினிமாவில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிப்பில் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் என் கிஷோர் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் மாயோன். அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று கலந்தது என்பதை மையக் கருவாகக் கொண்டு உருவாக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் குடும்பத்துடன் கொண்டாடும் படமாக இடம் பிடித்துள்ளது. மேலும் பார்வையற்றவர்களுக்கான பிரத்தியேகமாக ஆடியோ டிஸ்கிரிப்ஷனுடன் படம் வெளியாகியதும் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது. தமிழகத்தில் கிடைத்த வரவேற்பு காரணமாக இந்த படத்தை வரும் ஜூலை 7ஆம் தேதி தெலுங்குவில் மிக பிரம்மாண்...

ஜூன் மாதம் 17ஆம் தேதி திரைக்கு வரும் ‘மாயோன்’ திரைப்படம்!

News
நட்சத்திர நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட, ஆன்மீக அறிவியல் உணர்வை பிரதிபலிக்கும் டிஜிட்டல் செல்லுலாய்ட் படைப்பான 'மாயோன்' படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இன்றைய திரை உலக சூழலில் பான் இந்திய படங்களுக்கு வரவேற்பு இருப்பது புதிய டிரெண்ட் என்றால், தரமான உள்ளடக்கத்தை கொண்டிருக்கும் படங்களுக்கு எப்போதும் டிமாண்ட்டும், வரவேற்பும் இருக்கிறது. தமிழ் திரை உலகில் ஒரு திரைப்படம் உருவான பிறகு, அதன் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக் என ஏதேனும் ஒரு வகையில் வெளியாகி ரசிகர்களை கவரும். 'மாயோன்' பட குழுவினர், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வித்தியாசமான முறையில் சிந்தித்து, இந்தியாவில் இதுவரை யாரும் செய்திராத வகையில் முதன் முதலாக பார்வை சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் படைப்பை உணர்ந்து கொள்ளும் வகையில் 'மாயோன்' பட டீஸரை பிரத்யேக ஒலிக்க...
பழமையான கோவிலின் பின்னணியில் அமைக்கப்பட்ட திரில்லர் படம்’ மாயோன்’!

பழமையான கோவிலின் பின்னணியில் அமைக்கப்பட்ட திரில்லர் படம்’ மாயோன்’!

News
தமிழ் திரை உலகில் வலுவான கதைகளை மையப்படுத்தி சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வெளியிடுவதில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் அடுத்ததாக 'மாயோன்' எனும் புதிய திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறார்கள். 'மாயோன்' படத்தின் டீசர் வெளியாகி, அதில் இடம்பெற்ற புதிரான புராண இதிகாச கதையால், ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதைத்தொடர்ந்து இரண்டு மயக்கும் மெட்டுகளுடனான பாடல்கள் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. தயாரிப்பு நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான சைக்கோ திரைப்படம் ஏ சான்றிதழ் பெற்றிருந்தது, அதிலிருந்து மாறுபட்டு, 'மாயோன்' படம் 'யு' சான்றிதழ் பெற்றுள்ளது. இப்படம் சென்சாரில் எந்த ஒரு காட்சியும் வெட்டப்படாமல் முழுப்...