‘தி லயன் கிங்’கை தமிழ் பேச வைக்கும் மதன் கார்க்கி!
டிஸ்னியின் பிரமாண்ட லைவ் - ஆக்ஷன் படமான 'தி லயன் கிங்' படத்தின் தமிழ் பதிப்புக்கு வசனம் மற்றும் பாடல்கள் எழுதும் விருது வென்ற எழுத்தாளர் மதன் கார்க்கி.
2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு ரத்தின கல்லான ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் வழங்குகிறது.
அனிமேஷனில் உருவாக்கப்பட்ட அதன் முந்தைய பதிப்பானது வலுவான மற்றும் உணர்ச்சி ரீதியான கதை சொல்லல் மற்றும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களுக்காக புகழ் பெற்றது. அது எல்லா இடங்களிலும் ரசிகர்களின் இதயங்களை வென்றது. தற்போது பெரிய திரையில் அதன் லைவ் ஆக்ஷன் பதிப்பை பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
தமிழ் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்கும் நோக்கில் டிஸ்னி இந்தியா, தமிழ் பதிப்புக்கு வசனங்கள் மற்றும் பாடல்களை ...



