மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிக்கும் “மாறா”!
மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் சமீபத்தில் வெளியான "மாறா" படத்தின் ஃபர்ஸ்ட் லுக், அட்டகாசமான வடிவத்தில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, படத்தின் மீது பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் நேரிடையாக அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் 2020 டிசம்பர் 17 அன்று வெளியாகிறது. ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பையும் தாண்டி, தற்போது படத்தின் இசை உரிமையை தென்னகத்தில் கோலோச்சும் திங்க் மியூசிக் (Think Music) நிறுவனம் பெற்றுள்ளது படத்திற்கு மேலும் பெரும் பலம் சேர்த்துள்ளது.
ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் ப்ரமோத் ஃப்லிம்ஸ் ( Pramod Films )சார்பில் இது குறித்து கூறியதாவது.....
தென்னகத்தில் இசைத்துறையில், ஜாம்பவானாக திகழும் திங்க் மியூசிக் (Think Music) நிறுவனத்துடன், இனைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி. அவர்கள் வெளியிட்டிருக்கும் ஒவொரு ஆல்பமும் மிகப்பெரும்...





