பேஸ்புக் மூலம் நடிக்க கிடைத்த வாய்ப்பு – நடிகை நிம்மி
விரைவில் வெளிவரவுள்ள 'மேகி' என்கிற படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ள நிம்மி ,திரையில் தான் அறிமுகமான அனுபவம் பற்றிப் பேசுகிறார்:
"இந்த 'மேகி ' படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு பேஸ்புக் மூலம் தான் கிடைத்தது .அதற்குக் காரணம் மாடல் கோ ஆர்டினேட்டர் கோபிநாத் என்பவர் தான். பேஸ்புக் மூலம் அறிமுகமாகும் போது நிறைய பேக்குகளாக வருவார்கள். பலவும் போலிகளாக இருக்கும். ஆனால் எனக்கு இந்த படமே பேஸ்புக் மூலம் தான் கிடைத்தது என்பதை நான் சொல்லியாக வேண்டும் .என்னை அவர்களுக்குத் தெரியாது அவர்களை யார் என்றும் எனக்குத் தெரியாது. என்னுடைய டப்மாஷ் பார்த்து விட்டு என்னை அழைத்தார்கள் .ஒருவரிடம் திறமை உள்ளதா இல்லையா என்பது ஒரு டப்மாஷ்ஷை வைத்து முடிவு செய்ய முடியுமா?
யாருடைய குரலுக்கோ நடித்துக் காட்டும் டப்மாஷ் பார்த்தோ போட்டோக...
