Tag: Mahima Nambiar
மகா முனி தந்த மகிழ்ச்சியில் மஹிமா நம்பியார்!
மகாமுனி படத்தின் மெகா வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மஹிமா நம்பியார். தென்னிந்திய சினிமாவில் இனி ஒரு நல்ல நடிகை என்ற அடையாளத்தோடு உலா வரும் அளவிற்கு மகாமுனி படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. அந்த சந்தோஷத்தோடு நமது கேள்விகளுக்கு மிக இயல்பாக பதில் அளித்தார்,
"மஹிமாவிற்கு சினிமா ஆர்வம் எப்படி வந்தது?"
"அதுதான் எனக்கே தெரியவில்லை. எங்கள் வீட்டில் யாருக்கும் சினிமா தொடர்பு என்பது துளியும் கிடையாது. எந்த சினிமா பின்புலமும் இல்லாத குடும்பத்தில் பிறந்த எனக்கு ஏனோ சிறுவயது முதலே நடிப்பின் மீது அளப்பரிய ஆசை மற்றும் ஆர்வம். நாம் உண்மையாக ஒன்றை நேசித்தால் அது நம்மை நோக்கி வருமல்லவா? அதுதான் என்னை நடிகையாக்கி இருக்கிறதென்று நினைக்கிறேன்"
"முதல்பட அனுபவம் பற்றி சொல்லுங்கள்?"
"எப்படியாவது நடிகையாக வேண்டும் என்ற ஆர்வத்தில் தினமும் வீட்டில் கண்ணாடி முன்பு நின்று நடித்துப் பா...








