ஒரே படத்தில் உலகப் புகழ்!
நெட்ஃப்ளிக்ஸின் ஒரே ஒரு ஹாலிவுட் தொடரில் நடித்து உலகப்புகழ்பெற்று விட்டார் ஒரு தமிழ்ப்
பெண். அவர் பெயர் மைத்ரேயி ராமகிருஷ்ணன்(Maitreyi Ramakrishnan).அவருக்கு பதினெட்டு வயது தான் ஆகிறது அதற்குள் எட்டுதிக்கும் அவர் சென்றடைந்து விட்டார்.
ஹாலிவுட்டின் பிரபல நடிகையும் எழுத்தாளருமான மிண்டி கலிங்
(Mindy Kaling) என்பவர் இயக்கிய நெட்ஃப்ளிக்ஸ் தொடர்தான் 'நெவர் ஹேவ் ஐ எவர்' (Never Have I Ever ).அந்தத் தொடரின் வெற்றியை மின்னணு ஊடகங்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.சமூக ஊடகங்களில் தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடுகிறார்கள்.இந்த மைத்ரேயி ராமகிருஷ்ணனின் பெற்றோர் ஈழத்திலிருந்து கனடாவிற்குப் புலம் பெயர்ந்தவர்கள். மைத்ரேயியின் பள்ளிப்படிப்பு கனடாவில் தான். பள்ளியில் படித்த போதே நாடகங்களில் நடித்தும் ,சிலவற்றை எழுதி இயக்கியுமிருக்கிறார்.
பொ...
