பிரைம் வீடியோவின் மைத்ரி: பெண்களுக்கான முதல் பிரத்யேக நிகழ்ச்சி!
பிரைம் வீடியோவின் மைத்ரி: பெண்களுக்கான முதல் பிரத்யேக நிகழ்ச்சி, ( Maitri: Female First Collective ) சென்னையில் முதல் அமர்வாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் இந்தியப் பொழுது போக்கு துறையில் ஆதிக்கம் செலுத்தும் முன்னணி பெண் ஆளுமைகளான ஐஸ்வர்யா ராஜேஷ், மாளவிகா மோகனன், மது போன்ற விருது பெற்ற நடிகர்கள் மற்றும் ரேஷ்மா கட்டாலா, சுவாதி ரகுராமன், யாமினி யக்னமூர்த்தி போன்ற திரைக்குப் பின்னால் உள்ள திறமைசாலிகள், அபர்ணா புரோஹித் போன்ற படைப்பாளிகள் வரை எட்டு வலிமையான பெண்கள் இந்த அமர்வில் கலந்துகொண்டனர். மற்றும் நடுவராக ஸ்மிருதி கிரண் பங்கு பெற்றார்.
முதல் அமர்வாக நடந்த இந்நிகழ்வினில், பெண் பிரதிநிதித்துவத்தின் பரிணாம வளர்ச்சி மற்றும் நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்குத் தொழில்களில் பெண்களின் பங்கேற்பு ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், பெண்களுக்குச் சிக்கலற்ற... சமமான பணிச்சூழலை உருவாக்கு...
