ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் ‘பாம்பாட்டம்’!
“பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதுபோல படம் வருவதற்கு முன்பே ‘பாம்பாட்டம்’ படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பற்றவைத்துள்ளது.
“கதை, களம், காட்சி அமைப்புகள், கலை இயக்கம், கிராபிக்ஸ் தொழில் நுட்பம் என ‘பாம்பாட்டம்’ படத்தில் பரவச அனுபவத்திற்கு பஞ்சமிருக்காது” என்று நம்பிக்கை மிளிர பேசும் இயக்குனர் வி.சி.வடிவுடையான், இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார்.
வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள ‘பாம்பாட்டம்’ ஒரு சாம்ராஜ்யத்தின் கதை. அந்த சாம்ராஜ்யத்தின் ராணியாக ரசிகர்களை நடிப்பால் கவர்ந்திழுக்கப்போகிறார் மல்லிகா ஷெராவத். ‘திருட்டு பயலே’, ‘நான் அவனில்லை’ புகழ் ஜீவன் இரட்டை வேடங்களில் கதாநாயகனாக கலக்குகிறார்.
ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரமாண்டமாக தய...

