Saturday, August 29

Tag: Mandira Bedi

சாதனை படைத்த  “சாஹோ” வசூல்!

சாதனை படைத்த “சாஹோ” வசூல்!

News
இந்திய சினிமாவின் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து 330 கோடியை 4 நாட்களில் குவித்து சாதனை படைத்திருக்க்கிறது பிரபாஸின் “சாஹோ”.  பிரபாஸின் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளமும், பிரபல்யமும் அவர் படங்களை தேர்ந்தெடுக்கும் விதமும் இந்த அளப்பரிய வெற்றிக்கு காரணியாகியுள்ளது. தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து பிரபாஸின் வெறித்தனமான ரசிகர்களால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. பாகுபலி படங்கள் மூலம் ரசிகர்களை வியப்பின் உச்சிக்கு இட்டுச் சென்ற பிரபாஸ் சாஹோவிலும் அதைத் தொடர்ந்திருக்கிறார். இந்தியா மட்டுமல்லாது உலகளவிலும் “சாஹோ” திரைப்படம் சாதனைகள் படைத்து வருகிறது. இதனை டோலிவுட் டார்லிங் பிரபாஸின் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.  ரிலீஸான முதல் நாளிலேயே 100 கோடியை கடந்து சாதனை படைத்த “சாஹோ” இரண்டாம் நாளில் உலகளவில் 205 கோடியை கடந்தது. வசூலில் புயலாய் பாய்ந்த “சாஹோ” இந்தியாவில் அவஞ...
சாஹோ படத்தில் இருந்து சுமூகமாக பிரிந்த இசையமைப்பாளர்கள்!

சாஹோ படத்தில் இருந்து சுமூகமாக பிரிந்த இசையமைப்பாளர்கள்!

News
நடிகர் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படக்குழுவில் இருந்து இசையமைப்பாளர்கள் ஷங்கர் இஷான் லாய் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். இது மற்றவர்களுக்கு ஒரு தொழிலில் முறைப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை காட்டியுள்ளது. முதலில், இசையமைப்பாளர்கள் மூவரும் 'சாஹோ' தயாரிப்பாளர்களுக்கு படம் வெற்றி பெற தங்கள் வாழ்த்துகளை சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்தனர். அதன் பிறகு, தயாரிப்பாளர்கள் இசையமைப்பாளர்களை வாழ்த்தியதோடு, அவர்கள் படத்தில் இருந்து வெளியேறிய செய்தியை அறிவித்தனர். தயாரிப்பாளர்கள், UV Creations தங்கள் ட்விட்டரில், "ஷங்கர் இஷான் லாய் உங்கள் ஆதரவுக்கு நன்றி, பணியாற்றுவதற்கு சிறந்த மனிதர்கள். உங்களுடன் விரைவில் பணிபுரிவதற்கு எதிர்பார்த்து காத்திருக்கிறேன். #Saaho " என்று பதிவிட்டனர். தயாரிப்பாளர்கள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்ற இசையை இந்த படத்தின் மூலம் கொடுக்கும் முயற்சியில் இருக்கிறார்கள...

சாஹோ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

News
ரெபல் ஸ்டார் பிரபாஸ் பாரம்பரிய நடைமுறை மற்றும் எது முடியும், எது முடியாது என்ற எண்ணங்களை எல்லாம் உடைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். பாகுபலி படத்துக்காக முழுமையாக ஐந்து ஆண்டுகளை அர்ப்பணித்த ஒரே நடிகராக திகழ்ந்தார் பிரபாஸ். அவரது கடின உழைப்புக்கு பலனாக உலகம் முழுக்க பல்வேறு சாதனைகளை புரிந்தது பாகுபலி.  பிரபாஸ் ரசிகர்கள் அவரது அடுத்த படமான "சாஹோ"வுக்காக பொறுமையாக காத்திருக்கிறார்கள், அவர்கள் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. பிரபாஸ் Instagramல் சுட்டிக் காட்டியது போல காத்திருப்பு முடிந்து விட்டது. பிரபாஸ் மிகவும் தீவிரமாக இருக்கும் சாஹோவின் சமீபத்திய போஸ்டர் ஒன்றை அவரது Instagramல் வெளியிட்டார். அதில் படத்தின் வெளியீட்டு தேதி 15 ஆகஸ்ட் 2019 என குறிப்பிடப்பட்டிருக்கிறது. சரித்திர சாதனை படைத்த பாகுபலி படத்துக்கு பிறகு ரெபல் ஸ்டார் பிரபாஸின் நடிப்பில் வெளியாகும் முதல...