Friday, October 23

Tag: Manushyaputhiran

பிரபலங்கள் இணையும் “பத்து தல” திரைப்படம் !

பிரபலங்கள் இணையும் “பத்து தல” திரைப்படம் !

News
எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வரும் கோடை காலத்தில் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், படத்தில் இணைந்து வரும் நடிகர் பட்டாளம், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிறச்செய்கிறது. சமீபத்தில் ப்ரியா பவானி சங்கர் படத்தில் நாயகியாக இணைந்த நிலையில் தற்போது தமிழக இலக்கிய ஆளுமை, கவிஞர் மனுஷ்யபுத்திரன் மற்றும் பாடகர் அசுரன் படப்புகழ் டிஜே இப்படத்தின் நடிகர் குழுவில் இணைந்துள்ளனர். இது குறித்து இயக்குநர் ஓபிலி. N.கிருஷ்ணா கூறியதாவது... தமிழக இலக்கிய ஆளுமை, கவிஞர் மனுஷ்யபுத்திரன் மற்றும் பாடகர் டிஜே அவர்களை எங்கள் படத்திற்கு, வரவேற்பதில் மகிழ்சியடைகிறோம். மனுஷ்யபுத்திரன் அவர்களின் கவித்திறமையும், இலக்கிய திறமையும் பிரசித்தி பெற்றது. இப்படத்தில் சமூக சேவகர் உதயமூர்த்தி எனும்...