மறக்குமா நெஞ்சம் _ விமர்சனம்
பள்ளி, கல்லூரி முடித்து சொந்தத் தொழில் செய்து வருகிறார் நாயகன். பள்ளி இறுதித் தேர்வு எழுதி பத்தாண்டுகள் கழிந்த பிறகு பிரச்சினை ஒன்று வருகிறது. அதாதவது, அவர் இறுதித் தேர்வு எழுதிய ஆண்டில், இவரது பள்ளியில் தேர்வின் போது தில்லு முல்லு நடந்திருக்கிறது.. ஆகவே அப்போது படித்த மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வந்து மூன்று மாதங்கள் படித்து மறுபடி இறுதித் தேர்வு எழுத வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
இதை அடுத்து, அந்த பேட்ச்சை சேர்ந்த மாணவர்கள் மீண்டும் படிக்கிறார்கள்.
இந்த நிலையில், பள்ளி நாளில் சொல்லாத காதலை இப்போது தோழியிடம் சொல்லிவிட எத்தனிக்கிறார் நாயன்.
அந்த தோழிக்கோ, அப்போதுதான் திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறது.
இறுதியில் என்ன ஆனது… தோழியிடம் காதலை சொன்னாரா.. அவள் ஏற்றுக்கொண்டாளா என்பதுதான் கதை.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்த ரக்ஷன்,
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் சிறு ...
