“கலைஞர் சொன்ன வீரமும் காதலும்!”_ஆ.ராசா சுவாரஸ்ய தகவல்!
"காதலில் எத்தனை வகை உண்டு தெரியுமா" பட விழாவில் மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா MP ருசிகர தகவல்!
காத்துவாக்குல ஒரு காதல்' பட விழாவில் மத்திய மத்திய முன்னாள் அமைச்சர் திரு ஆ . ராசா MP பேசியதாவது :
"இந்த விழாவிற்கு என்னையும் அழைத்து பெருமை சேர்த்திருக்கும் தயாரிப்பாளர் எழில் இனியன் அவர்களே, இயக்குனர் மாஸ் ரவி அவர்களே இத்திரைப்படத்தின் கலைஞர்கள் மஞ்சுளா அவர்களே, ஜி. கே.வி அவர்களே, சூப்பர் சுப்பராயன் அவர்களே, சுபாஷ் மணியன் அவர்களே, ராஜ்குமார் அவர்களே, இவர்களோடு இணைந்து பணியாற்றிய ஏனைய கலைஞர்களே...
பத்திரிக்கையாளர்களே, ஊடகவியல் நண்பர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம் .
நான் சார்ந்திருக்கின்ற திராவிட முன்னேற்ற கழகத்துக்கும் கலை இலக்கியம் - திரைத்துறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நான் அரசியலுக்கு வந்த 90-களில் இருந்தே, அதிகமான நேரத்தை சினிமாவிற்கு என்...


