கிச்சா சுதீப் நடித்த அதிரடி படம் MAX
கிச்சா சுதீப் நடித்த அதிரடி படம் MAX கன்னடத்தில் பிளாக்பஸ்டர் மற்றும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது!
எதிர்பார்க்கப்பட்ட படம் *MAX*, கிச்சா சுதீப் நடிப்பில் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் 27 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இன்று கன்னட மொழியில் வெளியாகி
பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியைத் தழுவி, நல்ல விமர்சகர்களின் மற்றும் பார்வையாளர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது. புதிய இயக்குனர் விஜய் கார்த்திகேயா இயக்கிய இந்தப் படம், கலைப்புலி எஸ். தாணு தயாரித்து, வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகி அதிரடி படமாக கிச்சா சுதீபின் நுணுக்கமான நடிப்புடன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
இசையமைப்பாளர் அஜனீஷ் பி. லோக்நாத், படத்தின் சிறந்த இசையை உருவாக்கி, படத்தின் மகத்துவத்திற்கு மேலும் உயர்வு சேர்த்துள்ளார். புதிய இயக்குனரும், அனுபவம் வாய்ந்த கலைஞர்களும் இணைந்து உருவாக்கிய இந்த முயற்சி, *MAX* ...
