கலர்ஸ் தமிழில் குஷ்பூ நடிக்கும் ‘மீரா’நெடுந்தொடர்!
கலர்ஸ் தமிழின் புத்தம் புதிய நெடுந்தொடர் ‘மீரா’, நடிகை குஷ்பூ நடிக்கும் மனதை நெகிழவைக்கும் முதிர்ச்சியான காதல் கதை
~மீரா கதாபத்திரத்தில் நடிகை குஷ்பூ நடிக்கும் இந்நெடுந்தொடர், மார்ச் 28 அன்று முதன்முறையாக கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பைத் தொடங்குகிறது ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு இது ஒளிபரப்பாகும். ~
சென்னை: 21 மார்ச் 2022: காதல் கதையைச் சொல்லும் காவியங்களுக்கு எப்போதும் அழிவில்லை. மீராபாய்க்கும், கிருஷ்ணனுக்கும் இடையிலான காதல் கதையும், இத்தகைய அமரக் காவியங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது. கடவுள் கிருஷ்ணன் மீது மீரா கொண்ட பக்திக்கு வரம்புகளே இல்லை. சமூக மற்றும் குடும்ப பழக்கவழக்கங்களை ஒதுக்கித் தள்ளிய மீராவின் தைரியமும், காதலும் தான் வரலாற்று நாயகிகளுள் ஒன்றாக அவரை ஆக்கியிருக்கிறது. இசைப்பாடல்களை எழுதிப் பாடுவதில் புகழ்பெற்ற மீராவின் காதல் கதையிலிருந்து உத்வேகம் பெற்று உர...
