‘மழை பிடிக்காத மனிதன்’ படம் குறித்து நடிகை மேகா ஆகாஷ்!
"என் கரியரில் சிறந்த கதாபாத்திரத்தை ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் மில்டன் சார் கொடுத்துள்ளார்”- நடிகை மேகா ஆகாஷ்!
ஸ்டைலிஷ் கதாநாயகி, பக்கத்துவீட்டுப் பெண் என பலதரப்பட்ட கதாபாத்திரங்களுக்குப் பொருந்திப் போகும் கதாநாயகிகளை தமிழ் சினிமா ரசிகர்கள் சிவப்பு கம்பளத்தோடு வரவேற்பார்கள். அப்படிபட்ட திறமையான நடிகைகளில் மேகா ஆகாஷும் ஒருவர். ஆகஸ்ட் 2, 2024 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அவர் நடித்திருக்கிறார்.
படம் குறித்தானத் தனது அனுபவங்களை உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டார், “விஜய் மில்டன் சார் எப்போதும் தனது படங்களில் கதாநாயகிகளுக்கு வலுவான கதாபாத்திரங்களைத் தருவார். ’மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்காக என்னை அணுகியபோது, கதையைக் கேட்கும் முன்பே என் மனதில் தோன்றிய முதல் விஷயம் எனக்கு ஒரு வலுவான கதாபாத்திரம் கிடைக்கிறத...

