மெய்படச் சொல்லலாமா?
திரைப்படம் குறித்த செய்திகளையும், புகைப்படங்களையும் பத்திரிகைகளுக்கு அனுப்புவதே திரைப்பட பி.ஆர்.ஓக்களின் பணியாக இருந்தது ஒரு காலம். ஆனால் இப்போதெல்லாம் வெறும் செய்தி மற்றும் படங்களை மட்டும் அனுப்புவதில்லை. படம் வெளியாகும்போது பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேக காட்சியை திரையிட்டுக் காட்டிய கையோடு, அப்படத்தின் விமர்சனத்தையும் அனுப்ப ஆரம்பித்து விட்டனர்.
சமீபத்தில் திரைக்கு வந்த மெய்படச் செய் என்ற படத்தின் விமர்சனத்தை ஒரு பிரபல நாளிதழில் படித்தபோது அதிர்ச்சி அடைய நேரிட்டது. காரணம் அந்த விமர்சனத்தை அதற்கு முன்பு எங்கோ படித்ததுபோல் தோன்றியது. சந்தேகத்துடன் அப்படத்தின் பத்திரிகை தொடர்பாளர் அனுப்பிய திரைப்பட விமர்சனத்தை படித்தபோது அடைந்த அதிர்ச்சி அளவேயில்லை.
பத்திரிகை தொடர்பாளர் அனுப்பிய விமர்சனத்தை மாற்றம் செய்யாமல் அப்படியே வெளியிட்டிருந்தது செய்திகளை முந்தித் தரும் அந்த நாளிதழ்.
படத்தலைப்பை...
