கடல் கன்னியாக நடிக்கும் ஆண்ட்ரியா!
Sahasa Veerudu Sagara Kanya என்ற பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தெலுங்குப் படம் ஒன்றில் ஷில்பா ஷெட்டி கடல் கன்னியாக நடித்தார். வெங்கடேஷ் கதாநாயகனாக நடித்த இப்படம் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது உருவாகும் படத்தில் ஆன்ட்ரியா கடல் கன்னியாக நடிக்கிறார்.
ஃபோக்கஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் முதல் படம். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, இவருடன் சுனைனா, முனீஷ்காந்த், இந்துமதி மற்றும் 50 குழந்தைகள் நடிக்கிறார்கள்.
இப்படத்தை, மணிரத்னம் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் DINESH SELVARAJ டைரக்ட் செய்கிறார். இவர், ‘துப்பாக்கிமுனை’ என்ற படத்தை டைரக்ட் செய்துள்ளார்.
சென்னை தி.நகரில் 50 லட்சம் மதிப்பில் செட்டி போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்துவருகிறது. இதையடுத்து திருச்ச...
