நிசப்தம் படத்தில் ஹாலிவுட் நடிகர் நடித்தது எப்படி?
நிசப்தம் திரைப்படத்தில் ஹாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான மைக்கேல் மெட்ஸன் எப்படி நடிக்க ஒப்பந்தமானார் என்பது குறித்து இயக்குநர் ஹேமந்த் மதுர்கர் கூறுகிறார்.
அமேசானின் திரைப்பட நூலகத்தில் புதிதாக சேர்ந்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று நிசப்தம். அற்புதமான கதையுடன், மிகப்பெரிய ஹாலிவுட் நடிகர்கள் நடித்திருக்கும் திரைப்படம். மைக்கேல் மேட்ஸன் எப்படி இந்தப் படத்தில் நடிக்க வந்தார் என்பது குறித்து இயக்குநர் ஹேமந்த் மதுர்கர் கூறுகிறார்.
முதலில் எப்படி ஒரு ஹாலிவுட் நடிகருக்கான தேடல் இருந்தது என்பது பற்றியும், பொதுவாக ஏன் ஹாலிவுட் நடிகர்கள் இந்தியப் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வதில்லை என்பது பற்றியும் ஹேமந்த் பகிர்கிறார்.
"ரிச்சர்ட் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பத்திலிருந்தே ஒரு ஹாலிவுட் நடிகரை நாங்கள் தேடி வந்தோம். ஆனால் லாஸ் ஏஞ்சல்ஸில் நான் தங்கியிருந்த போது, ஹாலிவுட் நடிகர்கள் ஒர...
