எதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான குடும்பக் கதை ‘மிடில்கிளாஸ்’!
எதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான குடும்பக் கதை 'மிடில்கிளாஸ்': விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது!
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அனைவருமே வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். படங்களில் கூட வேகம், விறுவிறுப்பு என்ற சூழல் வந்தவுடன் குடும்ப பாங்கான படங்களின் வருகை என்பது குறைந்துவிட்டது. அதிலும் குடும்ப படங்களில் முழுக்க காமெடி முன்னிலைப்படுத்தியது குறைந்தே விட்டது என்று கூறலாம். ஏனென்றால் குடும்பங்களில் தான் அவ்வளவு காமெடி கலாட்டாக்கள் இருக்கும். அதைக் கதைக்களமாகக் கொண்டு நம்மை மகிழ்விக்க ஒரு கலகலப்பான குடும்பக் கதை ஒன்று தயாராகவுள்ளது.
'அறம்' தொடங்கி சமீபத்திய 'க/பெ ரணசிங்கம்' வரை எப்போதுமே புதுமையான நம்பிக்கைக்குரிய கதைகளுக்குக் கைகொடுக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார். அவருடன் இணைந்து 'டோரா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாஸ் ராமசாமியின் கெளஷ்துப் எண்டர்ட...
