12-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘மைண்ட் பாடி சோல்’ இசை நிகழ்ச்சி!
பாடகரும்-நடிகருமான எம் ஜே ஸ்ரீராம் கடந்த 35 ஆண்டுகளாக 5,000-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளாக ஜி.என்.செட்டி சாலையில் உள்ள தி ரெசிடென்சியில் உள்ள பிளாக் அண்ட் ஒயிட் ரெஸ்டோ பாரில் 'மைண்ட் பாடி சோல்' என்ற தலைப்பில் ஒரு தமிழ் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இந்த நிகழ்ச்சி ஜூன் 24-ஆம் தேதியோடு 600 வாரங்களை நிறைவு செய்துள்ளது, இதனை தொடர்ந்து 601-வது எபிசோட் ஜூலை 1-ஆம் தேதி நடைபெற்றது.
இது குறித்து பேசிய ஸ்ரீராம், "12 ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 10, 2009 அன்று தி ரெசிடென்சியின் பொது மேலாளருடன் ஒரு சாதாரண சந்திப்பின் போது உருவாகியது தான் இந்த 'மைண்ட் பாடி சோல்'. "ரெஸ்டோ பாரில் ஒரு தமிழ் கச்சேரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அவரிடம் தெரிவித்தேன். அவர் ஆரம்பத்தில் தயங்கினாலும், பின்னர் ஒப்புக் கொண்டார். அடுத்த வாரத்திலேயே நாங்கள் கச்சேரியை தொடங்கினோம். ...
