Tuesday, September 29

Tag: minnal senthilkumar

கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பாடகி சுசீலா!

கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பாடகி சுசீலா!

News
கனடா வாழ் தமிழ் கலைஞர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் பாடகர் மின்னல் செந்தில்குமரன். சமூகநல மற்றும் விலங்குகள் நல ஆர்வலராகவும் இருப்பவர். 'மின்னல் இசைக்குழு' என்கிற பெயரில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். பல வருடங்களுக்கு முன் ஸ்ரீதர் இயக்கத்தில், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் வெளியான, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற, ‘சொன்னது நீதானா’ என்கிற பாடலுக்கு தற்போது புதிய வடிவிலான கவர் ட்ராக் அமைத்து தயாரித்து வெளியிட்டுள்ளார். Sonnathu Neethaana Cover Song Youtube Link: https://youtu.be/pIXiodqg_EI தனது வசீகர குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா பாடிய இந்த பாடலின், மீள் உருவாக்க பாடலை பாடகி சாம்பவி ஷண்முகநாதம் என்பவர் பாடியுள்ளார். இந்த பாடலை பார்த்துவிட்டு, சுசீலா அவர்கள் பாடகி சாம்பவியை பாராட்டியதுடன், இந்த பாடலுக்கு கவர் ட்ராக் இசையமைத்...