Wednesday, September 23

Tag: mishkin

மிஷ்கின் இசைக்கு எத்தனை மதிப்பெண்?

மிஷ்கின் இசைக்கு எத்தனை மதிப்பெண்?

News
ஹெச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர் ஆகியோர் தயாரிப்பில், சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார்.  சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய “ஒளிக்குப் பிறகு இருளுக்கு அப்பால்” என்னும் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் திரில்லர் வகைத் திரைப்படமான “டெவில்” பிப்ரவரி 2ல் வெளியாகவிருக்கும் நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஹெச் பிக்சர்ஸ் ஹரி பேசும்போது, ”மிஷ்கின் என்னுடைய குருநாதர் போன்றவர். நான் சினிமாவில் பார்த்து வியக்கும் ஆளுமைகளில் அவர் ஒருவர். அவருக்கு முதல் நன்றிகள். இந்த படத்தின் சப்ஜெக்ட் வித்தியாசமாக இருந்தது. இயக்குநர் ஆதித்யா படத்தின் ...
விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது!

விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது!

News
கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது! சமீபகாலமாக வெற்றிப் படங்களை கொடுத்து மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் *விஜய் சேதுபதி* முதன்முறையாக இயக்குனர் *மிஷ்கினுடன்* கைகோர்த்தி உள்ளார். *ட்ரெயின் (Train)* திரைப்படத்தை தமிழ்த் திரையுலகின் மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாளர் *கலைப்புலி.எஸ்.தாணு* இந்த ட்ரெயின் (Train) படத்தை தயாரிக்கிறார். இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது, எனவே *ட்ரெயின் (Train)* என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்காக *விஜய் சேதுபதி* வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார், மேலும் அவரது தோற்றத்திற்காக நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார்.*டிம்பிள் ஹயாதி* அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க...
“மிஷ்கின் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம்” – வெற்றிமாறன்!

“மிஷ்கின் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம்” – வெற்றிமாறன்!

News
டெவில் திரைப்பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”.  சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளர் ஜெயமோகன் பேசும் போது, ”இந்த உலகத்தில் இருக்கிற எல்லா விசயங்களையும் குறித்து கருத்து சொல்பவன் நான், ஆனால் ஒன்றைக் குறித்துப் பேச மட்டும் எனக்குத் தகுதியில்லை என்று கூறினால் அது கண்டிப்பாக இசை குறித்துத்தான். ஏனென்றால் எனக்கு...
மிஷ்கின் இசையமைக்கும்  “டெவில்” திரைப்பட படப்பிடிப்பு நிறைவு!

மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” திரைப்பட படப்பிடிப்பு நிறைவு!

News
  மாருதி பிலிம்ஸ் R இராதாகிருஷ்ணன் மற்றும் S.ஹரி சார்பில் ‘டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்’ P.ஞானசேகர் தயாரிக்கும் தமிழ் திரைப்படம் “டெவில்”. இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில், இயக்குநர் மிஷ்கின் முதல் முறையாக இசையமைக்கும் “டெவில்” படத்தின் படப்படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுமாகும், இப்படம் அறிவிக்கப்பட்ட போதே, ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியது. ரசிகர்களை இருக்கை நுணியில் கட்டிப்போடும் புதுமையான திரில்லராக ‘டெவில்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கின் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். படத்தின் தொழில் நுட்ப குழுவினர் விபரம் தயாரிப்பாளர் : R. ரா...
பள்ளிக் குழந்தைகள் கொண்டாடிய Children of Heaven

பள்ளிக் குழந்தைகள் கொண்டாடிய Children of Heaven

News
பள்ளிக் குழந்தைகள் கொண்டாடிய Children of Heaven தமிழக அரசின் சமீபத்திய முன்னெடுப்பு 'அரசு பள்ளிகளில் மாதம் ஒரு திரைப்படம்'. அதன்படி முதலாவதாக சாப்ளினின் The Kid திரையிடப்பட்டது. இந்த மாதத்திற்கான படம் Children of Heaven. இன்று (செப்டம்பர் 1) இயக்குனர் மிஷ்கின் வாலாஜாபாத் அரசு பெண்கள் பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் அப்படத்தைப் பார்த்து பின்பு பேசினார். மிஷ்கினிடம் குழந்தைகள் கேள்விகள் கேட்க, நீண்ட கலந்துரையாடல் நடந்தது. உரையாடலின் இடையில் ஆரம்பித்த மழை கடைசி வரை பெய்ய, "இந்த உன்னதமான படத்தைப் பார்த்த மாணவர்கள் நீங்கள் அனைவரும் சொர்க்கத்தின் குழந்தைகள் தான்" என்று உரையை முடித்தார் மிஷ்கின்....
மிஷ்கினின் வருத்தம்!

மிஷ்கினின் வருத்தம்!

News
என் படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டதைப் பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன், தலைப்பு சுவையாக இருக்க வேண்டுமென நான் சொன்னதை வேறு மாதிரி புரிந்து கொண்டு செய்தி போட்டிருக்கிறார்கள், நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. என் படத்தைப் பாருங்கள் படம் நன்றாக இருந்தால் பாராட்டுங்கள், படம் நன்றாக இல்லையெனில் கடுமையாக விமர்சியுங்கள், இப்போதல்ல என் முதல் படத்திலிருந்தே இதைச் சொல்கிறேன் விமர்சிப்பது அனைவரின் உரிமை,உரிமை மீறலை நான் என்றும் அனுமதிக்க மாட்டேன். - மிஷ்கின்...
மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” படத்தின் படப்பிடிப்பு தீவிரம்!

மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” படத்தின் படப்பிடிப்பு தீவிரம்!

News
முதன்முறையாக இயக்குனர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது  ! மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் R.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’ இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’. இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கின்றார். இவர்களுடன் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார். மாறா, குதிரைவால் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துகுமார் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். வால்டர், செல்ஃபி படங்களைத் தொகுத்த S.இளையராஜா படத்தொகுப்பாளராகவும், மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் செய்கிறார்கள். தமிழின் மிக முக்கியமான இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக  “டெவில்” மூலமாக  இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மிஷ்கின் அவர்கள் இதற்கு முன...