“மாடலிங் உலகின் நயன்தாரா” மீரா மிதுன்…
சூர்யா விக்னேஸ்வரன் கூட்டணியில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர் மீரா மிதுன். அதற்கு முன்பே 8 தோட்டாக்கள் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இவர், இந்த படத்தின் மூலம் இன்னும் அதிகம் கவனிக்கப்பட்டார்.
சினிமாவிற்கு தான் இவர் புதிது.. ஆனால் மாடல் உலகில் கிட்டத்தட்ட இவர் ஒரு நயன்தாரா என்றே சொல்லலாம். ஆம்.. சர்வதேச அளவில் மோஸ்ட் வான்டட் தென்னிந்திய மாடல் முதல் சாய்ஸாக இருப்பது மீரா மிதுன் தான்.
மிஸ் சௌத் இந்தியா அழகி பட்டத்தை வென்ற இவர் சென்னையைச் சேர்ந்த அக்மார்க் தமிழ் பொண்ணு.. படிப்பு, நடனம் என்று மட்டுமே இருந்த இவரை அவரது உயரமும் நிறமும் ஒரு மாடல் அழகியாகவே பலருக்கும் தோன்றச் செய்தது..
ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது நீங்கள் மாடலா என பலரும் கேட்கவே, அவருக்குள் தன்னை அறியாமலேயே மாடலிங் மீதான ஆர்வம் ...
