மாடர்ன் லவ் சென்னையின் அறிமுகத்தை ப்ரைம் வீடியோ அறிவிக்கிறது!
அதிகம் – எதிர்பார்க்கப்பட்ட சர்வதேச அளவில் பாராட்டுதல்களை பெற்ற மாடர்ன் லவ் ஃப்ரான்சைசின் மூன்றாவது இந்திய அத்தியாயம் – மாடர்ன் லவ் சென்னையின் அறிமுகத்தை ப்ரைம் வீடியோ அறிவிக்கிறது
டைலர் டுர்டென் மற்றும் கினோ ஃபிஸ்டின் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட , மாடர்ன் லவ் சென்னை இந்திய சினிமாவின் ஆறு புத்திசாலி படைப்பாளிகளை ஒன்றிணைத்திருக்கிறது – பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார் , அக்ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா
இந்த தொடருக்கான இசையமைப்பாளர்களில் மேஸ்ட்ரோ இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், மற்றும் ஷான் ரோல்டான் உள்ளடங்குவர், பாடல்கள் மேஸ்ட்ரோ இளையராஜா, யுகபாரதி மற்றும் பாக்கியம் சங்கரால் எழுதப்பட்டுள்ளது
இந்த அமேசான் ஒரிஜினல் தொடரின் முதல் காட்சி இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள 240 நாடுகள் மற்றம் பிராந்தியங்களில் மே 18, 2023 அன்று வெளி...
