மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
மலையாளத் திரையுலகின் முன்னணி படைப்பாளியான லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் தயாராகி வரும் 'மலைக்கோட்டை வாலிபன்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
லிஜோ ஜோஸ் பெல்லிசேரி - மோகன்லால் கூட்டணியில் 'மலைக்கோட்டை வாலிபன்' எனும் படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள் படத்தின் புதிய தகவல்களுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். புத்தாண்டு தினமான இன்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் படக் குழு 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறது. அனல் பறக்கும் தோற்றத்தில் மோகன்லால் ஃபர்ஸ்ட் லுக்கில் தோன்றுவதால் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.
ஜான் மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி பிலிம்ஸ் மற்றும் மேக்ஸ் லேப் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஷிபு பேபி ஜான், கொசுமோன் மற்றும் அனுப் ...






