’மூடர் கூடம்’ நவீன் வெளியிட்டிருக்கும் அறிக்கை!
’மூடர் கூடம்’ திரைப்படத்திற்கு பிறகு நான் தயாரித்து இயக்கி நடித்துள்ள ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ திரைப்படம் வெளியிட தயாராக இருக்கும் நிலையில், Flash Films நிறுவனத்தின் சுவர்ணா சேதுராமன் என்பவர் எனது படத்தின் ரிலீசுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளார். அலாவுதீனின் அற்புத கேமரா படத்திற்காக அவர் 44.5 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் நான் அதை திருப்பி தரவில்லை என்றும் பொய்வழக்கு தொடுத்துள்ளார். உண்மையில் Flash Films நிறுவனத்திற்கும் இந்த திரைப்படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
2016ல் Flash Films சார்பில் திரு.ராகுலன், என்னுடைய மேனேஜர் திரு வாசுதேவன் ராமமூர்த்தியை அழைத்து நவீன் எங்களுக்கு ஒரு படம் செய்து தருவாரா என்று கேட்டார். அபெக்ஸ் ஃபார்மசிட்டிகள்ஸ் நிறுவணத்தின் வாரீசான விசாகனை ஹீரோவாக வைத்து படம் எடுக்க வேண்டும். விசாகன் அமேரிக்காவில் நடிப்பு பயிற்சி பெற்று வந்துள்ளார் என்று கூரினார். ...
