குறைந்த பட்ஜெட் திரைப்படங்களை ஊக்குவிக்க புதிய ஓடிடி தளம்!
புதிய படைப்பாளர்கள் மற்றும் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில் அகில இந்திய அளவில் முதல் முறையாக புதிய ஓடிடி தளம் உதயம்!
எம்.எஸ்.எஃப் (மூவி சூப்பர் ஃபேன்ஸ்) ஓடிடி தளத்தை தொடங்கும் தொழில்முனைவர் ராஜேஷ் கண்ணா மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் சுதாகர் சோழங்கத்தேவர்
திறமைமிகுந்த புதிய படைப்பாளர்கள் மற்றும் குறைந்த பொருட்செலவில் உருவாகும் திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில் அகில இந்திய அளவில் முதல் முன்முயற்சியாக புது ஓடிடி தளம் விரைவில் அறிமுகமாகவுள்ளது.
எம்.எஸ்.எஃப் (மூவி சூப்பர் ஃபேன்ஸ்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஓடிடி தளத்தை தொழில்முனைவர் ராஜேஷ் கண்ணா, தொழில்நுட்ப தொழில்முனைவோரும் ஓடிடி தளங்களின் கைதேர்ந்தவருமான சுதாகர் சோழங்கத்தேவர் ஆகியோர் இணைந்து அறிமுகப்படுத்தவுள்ளனர்.
இந்த புதிய முன்முயற்சி குறித்து ராஜேஷ் கண்ணா கூறுகையில், "உலகளவில் இன்று பல்வேறு ஓடிடி தளங்கள் உ...
