Friday, September 18

Tag: Mpparamesh

ஈழத்து மெல்லிசை மன்னர் எம்பி பரமேஷ்!

ஈழத்து மெல்லிசை மன்னர் எம்பி பரமேஷ்!

News
ஈழத்து மெல்லிசை மன்னர் எம்பி பரமேஷ் அவர்கள் இன்று பிறந்தநாள் காணும் இலங்கையின் மூத்த கலைஞர். ஈழத்து மெல்லிசை மன்னர் எம்பி பரமேஷ் அவர்கள் ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார். இசையை தனது வாழ்க்கையாக்கியவர் இன்றும் இசையோடு பயணம் செய்கிறார். வாழ்ந்தால் இசையோடு தான் என்று தனது வாழ்க்கையைப் பற்றியே பாடல் இயற்றி இசையமைத்து பாடியவர் தனக்கென ஒரு சங்கீத சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். 1968 களில் இலங்கையின் முதல் இசைத் தட்டுகளை வெளியிட்டு இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர். எமது இலங்கை கலைஞர்களும் சாதிக்க முடியும் என்று உலகுக்கு உணர்த்தியவர் ஈழத்து மெல்லிசை மன்னர் எம்பி பரமேஷ் அவர்கள். இசையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு அற்புத கலைஞர். எம்பி பரமேஷ் அவர்கள் இசைத்தட்டுகளை வெளியிடுவதற்கு முன் மேடை நிகழ்ச்சிகள் செய்து புகழ்பெற்றவர். பாடல் எழுதுவது, இசையமைப்பது, விளம்பர வேலைகள் என பொறுப்புக்கள் அதிகமானதால் படிப்பை...