கிரைம் திரில்லராக உருவாகும் ” முகமறியான்”!
பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து மக்களிடம் ஏகோபித்த வரவேற்பு பெற்ற ஊமைவிழிகள் சிவப்பு ரோஜாக்கள் போன்ற திரில்லர் பட வரிசையில் வித்தியாசமான கதையை கருவாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் "முகமறியான் ".
படத்தினைப் பற்றி இயக்குனர் சாய் மோரா கூறியதாவது,
" முகமறியான் திரைப்படத்தினை தயாரிப்பாளர் பி.திலீப் குமார் மிகவும் சவாலாக எடுத்து தயாரித்துள்ளார். அவரே வில்லனாகவும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கிறார். கொரோனா காலகட்டங்களில் பல நெருக்கடிகளை சந்தித்து ஆந்திரா வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். மிகவும் பழமையான கட்டிடங்கள் , திகில் நிறைந்த பகுதிகளிலும், பல வருடங்கள் ஆட்கள் நடமாட்டமில்லாத இடங்களிலும், படப்பிடிப்பு நடத்தினோம். இதனால் படக்குழுவினர் நடிகர்கள் பல விபத்துகளையும், திகிலான பல அனுபவங்களையும் சந்தித்தனர். சுமார் 55 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிவடைந்துள்ளது. படம் விரைவில் வெ...
