Monday, October 5

Tag: murder-mystery

ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ், ZEE5 தளத்தில் ஏப்ரல் 21 முதல் !

News
தமிழில் தொடர்ந்து தரமான படைப்புகளைத் தந்து, ரசிகர்களைக் கவர்ந்து வரும், இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளம், தனது அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸை வெளியிடுகிறது. பள்ளி மாணவர்களின் வாழ்க்கைப் பின்னணியில், புதுமையான திரில்லராக இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளது. Sol Production Pvt.Ltd சார்பில் ஃபாசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் தயாரித்துள்ள இந்த வெப்சீரிஸை, இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். திரைக்கதை வசனத்தை N பத்மகுமார் மற்றும் ரோஹித் நந்தகுமார் எழுதியுள்ளனர். பள்ளியில் படித்து வரும் கூச்ச சுபாவம் கொண்ட இளைஞன் வியோம், அவனுக்கு தன்னுடன் வினாடி வினா நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் தாரா மீது ஈர்ப்பு வருகிறது. அவனும் தாராவும் சந்திக்கத் திட்டமிட்டிருந்த நாளில் தாரா காணாமல் போகிறாள், அதைத்தொடர்ந்து, தாராவின் உடல் ஏரியில் கிடைக்கிறது. தாரா மரணத்தால் உடைந்து...