Thursday, September 24

Tag: Music director D Imman

தயாரிப்பாளராகும் இசையமைப்பாளர் D.இமான்!

News
இசையமைப்பாளர் D.இமான் அவர்கள் தமிழ் சினிமாவில் நிகழ்த்தியிருப்பது அசாத்தியமான சாதனை. இசையில் பட்டி தொட்டி முதல், எட்டுதிக்கும் எதிரொலிக்கும் மெகா ஹிட் பாடல்களை தொடர்ந்து தந்து வருகிறார். அவரது மெலடி பாடல்கள் மனதை மயக்கும் தன்மை கொண்டவை. அதிரடி பாடல்கள் தமிழகத்தில் அனைத்து வீட்டு விஷேசங்களில் முதலிடம் பெறுபவை. இசையில் தனித்தன்மையுடன் பெரும் வெற்றியை பெற்றிருக்கும் அவர் திரைப்பயணத்தில் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கவுள்ளார். “DI Productions” எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார் D.இமான். இந்நிறுவனத்த்தின் முதல் தயாரிப்பாக “தேங்க் யூ ஜீஸஸ்” ( Thank You Jesus ) எனும் ஆன்மீக ஆல்பம் உருவாகிறது. முழுக்க இயேசு கிறிஸ்துவை போற்றும்படி ஆங்கில மொழியில், ஆன்மீக அன்பர்கள் எழுதி, பாடும் இந்த ஆல்பத்தில் 8 பாடல்கள் அடங்கியுள்ளது. இது குறித்து இசையமைப்பாளர் D.இமான் கூறியதாவது... ...
டொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்!

டொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்!

News
செம்மொழி அந்தஸ்து பெற்ற பெருமைமிகு தமிழ் மொழியின் டொராண்டோ தமிழ் இருக்கை தூதராக, இசையமைப்பாளர் டி.இமானுக்கு விசேட கெளரவம் வழங்கப்பட்டிருக்கிறது. இச்செய்தியை பகிர்ந்து கொண்ட டி.இமான் தெரிவித்ததாவது.... "உலகின் தொன்மையான மொழி எனப் போற்றப்படும் தமிழ், வாய் வழித் தொடர்பு மொழி என்பதைத் தாண்டி மனித குலத்தின் வாழ்வியல்,  நாகரீகம் மற்றும் கலாச்சாரங்களை தன் இலக்கியங்களில் உள்ளடக்கியதாகும். மொழிகளின் தாய் என தமிழ் புகழப்படுவது குறித்து தமிழன் என்ற முறையில் நான் பெருமையும் பேருவகையும் கொள்கிறேன். பல்வேறு கலை வடிவங்கள் மூலம் மொழிக்கு செழுமை ஏற்றிய மிகச் சிறந்த மனிதர்களால் ஆசிர்வதிக்கப்பட்டது தமிழ் நிலம். டொராண்டோ தமிழ் இருக்கையின் தூதராக நான் நியமிக்கப்பட்டபோது, இவற்றையெல்லாம் அறிந்து மிகவும் ஆச்சரியமடைந்தேன். கனடாவின் முதல் தர பல்கலைக் கழகமான டொராண்டாவில் நமது தாய்மொழிக்கு இர...