Thursday, September 3

Tag: Music Director SakthiBalaji

சென்னையின் அதி நவீன சவுண்ட் ஸ்டூடியோ: ‘சவுண்டபிள்’

சென்னையின் அதி நவீன சவுண்ட் ஸ்டூடியோ: ‘சவுண்டபிள்’

News
தரமான சவுண்ட் ஸ்டூடியோவுக்கான தேவை சென்னையில் இருப்பதை கருத்தில் கொண்டு, சவுண்டபிள் எனும் அதி நவீன ஒலியகத்தை வடபழனியில் தொடங்கி உள்ளார் இசை அமைப்பாளர் சக்தி பாலாஜி என். கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக செயல்பாட்டில் உள்ள போதும், கொவிட்-19 பெருந்தொற்று நிலைமையின் காரணமாக இன்று தனது பயணத்தை முறைப்படி சவுண்டபிள் தொடங்கியுள்ளது. ஃபாரம் மாலுக்கு எதிரே ஆற்காடு சாலையில் ரத்னா ஸ்டோர்ஸ் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்திருக்கும் சவுண்டபிள், திரைத்துறை தொடர்புடைய அனைவரும் எளிதில் அணுகக்கூடிய வகையில் அமைந்துள்ளது. சவுண்டபிள் ஸ்டூடியோ குறித்து மனம் திறந்த சக்தி பாலாஜி, “மும்பை மற்றும் ஹைதராபாத்தில் இருப்பது போன்ற தரமான ஒலியகங்கள் சில மட்டுமே சென்னையில் உள்ளன. மேலும், நான் ஒரு இசை அமைப்பாளராகவும் உள்ள காரணத்தால், ஒலி தொடர்பான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஸ்டூடியோ ஒன்று நமது ஊரில் தே...