இசைத் துறையில் முத்திரை பதிக்கும் சாம் சி.எஸ்.
பத்து ஆண்டுகளுக்குள் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பல பாராட்டுக்குரிய படங்களைத் தந்து, இசையுலகில் தன் அழுத்தமான முத்திரையைப் பதித்திருக்கிறார். சிறந்த இசைப் பாடல்களை தந்ததோடல்லாமல், மிகச் சிறந்த பின்னணி இசையையும் வழங்கி, யூ ட்யுபின் ஓ.எஸ்.டி. ஜூக் பாக்ஸில் அதிக வரவேற்பு பெறும் இசைக் கலைஞராகவும் திகழ்கிறார். வெகுவாக பாராட்டப்பட்ட 'விக்ரம் வேதா' படத்தின் தனித்துவமான இசை, அவரது அழுத்தமான முத்திரைக்கு ஒரு பிராண்ட் நேம் கொடுத்திருப்பதுடன் மேலும் பல நல்ல படவாய்ப்புகளையும் தேடித் தந்திருக்கிறது.
இது குறித்து விவரித்த இசையமைப்பாளர் சாமி சி.எஸ். "திரைத் துறையைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை காரணமாகத்தான் இந்த வெற்றி சாத்தியமானது. பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். காரணம் அவர்கள்தான் எனது பணியை ...
