NMH இண்டநேஷனல் பிக்சர்ஸ் வழங்கும் “முதல் மனிதன்” இசை வெளியீடு !
NMH இண்டநேஷனல் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் உசேன் தயாரிப்பில், இயக்குநர் ராஜராஜ துரை இயக்கியுள்ள திரைப்படம் முதல் மனிதன். மதத்தின் அரசியல் மனிதத்தை எப்படி அழிக்கும் என்பதை பேசும் படமாக சமூகத்திற்கு அவசியமான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, திரைபிரபலங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், இன்று இனிதே நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குநர் ராஜராஜதுரை பேசியதாவது…
எத்தனையோ தோல்விகளை நான் என் வாழ்வில் சந்தித்துள்ளேன். என் இன மக்களையும், மாற்று சாதியை சேர்ந்தவர்களையும் வரவேற்கிறேன். அதிர்ச்சியடையாதீர்கள் நான் என் இனம் என சொன்னது மனித இனத்தை, என் சாதி என சொன்னது ஆண் சாதியை, மாற்று சாதி என சொன்னது பெண் சாதியை தான். உலகில் ஆண் சாதி, பெண் சாதி தவிர்த்து வேறு எந்த சாதியும் இல்லை என்பதை நம்புவன் நான். அதைத்தான் இந்தப்படத்திலும் ச...
