சமூகக் கருத்தைச் சொல்லும் மியூசிக் வீடியோ ‘முற்றுப்புள்ளி’!
இசையமைப்பாளர் கிறிஸ்டி சினிமா தாகத்தோடு ஒரு திருப்புமுனை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர் .சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்த அவர் கர்நாடக இசை, இந்துஸ்தானி, மேற்கத்திய இசை என்று மூன்று வகை இசையிலும் பயிற்சி பெற்றுக் கற்று 15 ஆண்டுகள் செலவழித்துத் தன்னைத் தகுதியாக்கிக் கொண்டு களத்திற்கு வந்திருப்பவர்.
அவர் இப்போது 'நறுவி',' வன்முறைப்பகுதி' 'குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் ' என மூன்று படங்களுக்கு இசையமைத்து வருகிறார் .இவை விரைவில் வெளியாக உள்ளன.படங்கள் வெளியாகும் இடைவெளியில் நேரத்தை விரயமாக்காமல் தானே ஒரு கதை எழுதி ஒரு ஐந்து நிமிட மியூசிக் வீடியோ ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார் .அதுதான் 'முற்றுப்புள்ளி ' ' சமூக அக்கறையுடன் ஒரு படைப்பு,...கிறிஸ்டிக்கு இசையோடு கதை அமைப்பதிலும் ஆர்வம் உண்டு. அப்படி அவர் சமூகத்தில் இன்றைக்குப் பரவலாக அறியப்படும் பிரச்சினைகளான குழந்தையின்மை,கந்துவ...
