MX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்”!
MX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்”
இணைய தொடரின் டிரெய்லரை வெளியிடப்பட்டது!
இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை மையப்படுத்திய, உணர்வுபூர்வமான இந்த தொடரை இயக்கியுள்ளனர்.
அதீதமான சண்டை காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான கதையமைப்பு உள்ள இந்த தொடர், பிரத்தியேகமாக MX Original Series-ல் ஜனவரி 22-ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகவுள்ளது.
மும்பை: 21 ஜனவரி 2021-
“ உன்னால் உன் விதியை தேர்ந்தெடுக்க முடியும் , ஆனால் உன் எதிரிகளை உன்னால் தேர்ந்தெடுக்கமுடியாது. “
இது இரண்டு இளைஞர்களின் கதை, வாழ்வின் தொடக்கத்தில் சரியான பாதையில் ஒன்றாக ஆரம்பித்த அவர்கள், இறுதியில் விதிக்கும், கடமைக்குமான இரத்தக்களரியான போரில், அவர்கள் கொடுக்கும் விலை என்ன, என்பதே இதன் கதை. ஆக்சன் மற்று...

