Friday, October 23

Tag: Mysskin’s heart-warming gesture

“பாரம்” படத்திற்காக போஸ்டர் ஒட்டிய மிஷ்கின் ! 

“பாரம்” படத்திற்காக போஸ்டர் ஒட்டிய மிஷ்கின் ! 

News
சொன்னதை செய்த மிஷ்கின் பிரமிப்பில் ஆழ்ந்த திரையுலகம். சினிமா மீது தீராத காதல் கொண்டவர் இயக்குநர் மிஷ்கின். தனது தரமிக்க படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தனித்தன்மை மிக்க இயக்குநர் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் இயக்குநர் மிஷ்கின். இவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் அதே நேரத்தில் திரைக்கல்லூரிகளில் பாடங்களாக விவாதிக்கப்பட்டும் வருகின்றது. சினிமாவை உயிராக நேசிக்கும் அவர் நல்ல படங்கள் வரும் போது முதல் ஆளாக  நேசிக்கவும் பாராட்டவும் தவறுவதில்லை.  “பாரம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் “பாரம்” படம் வெளியாகும்போது நான் விளம்பரத்திற்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டுவேன் எனக்கூறியபடியே  அவர் தற்போது செய்து காட்டியுள்ளார். சினிமா மீதான அவரது அளவற்ற நேசிப்பு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தேசிய விருதை வென்ற “பாரம்” திரைப்படம் இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசுவாமி இயக்கத்தில...