நமீதா தியேட்டர்ஸ் – உண்மை சம்பவங்களின் அடிப்படியில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் OTT தளம் !
நமீதா தியேட்டர்ஸ் - உண்மை சம்பவங்களின் அடிப்படியில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் OTT தளம் !
கடந்த சில வருடங்களாக கணக்கற்ற வகையில் OTT தளங்கள் துவங்கப்பட்டுவருகின்றன. இவை ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமல்லாது உலகம் முழுதும் பரந்து விரிந்து ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது. எண்ணற்ற OTT தளங்களில் வெகு சில தளங்கள் மட்டுமே புதுமையான தரமான கதைகளை ஒளிபரப்பும் தளங்களாக இருந்து வருகின்றன.
தரமான OTT தளங்களின் வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது “நமீதா தியேட்டர்ஸ்” தளம். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் OTT தளமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தின் முதன்மை தூதுவராக ( Brand Partner ) நடிகை நமீதா அவர்களும் நிர்வாக இயக்குநராக திரு. ரவி வர்மா அவர்களும் உள்ளனர்.
இது குறித்து நடிகை நமீதா கூறியதாவது...
திரை உலக நண்பர்களும் மக்களும் கடந்த வருடங்களில் எனக...
