“தேசிய விருது வென்ற பாரம் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்” – மிஷ்கின்
தானாக உருவான சுயம்பு போல் தேசியவிருதை பல படங்களுடன் போட்டியிட்டு வென்று அனைவர் கவனத்தையும் ஈர்த்து என்ன படம் இது எனக்கேட்க வைத்த தமிழ் திரைப்படம் “பாரம்”. ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை Reckless Roses நிறுவனம் தயாரித்துள்ளது.
தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலராலும் பாராட்டப்பெற்ற இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தனது Gross Root Films நிறுவனம் பெயரில் SP Cinemas மூலம் வெளியிடுகிறார். படவெளியீட்டை ஒட்டி இப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய SP Cinemas நிறுவனர் கிஷோர் பேசியதாவது...
எனக்கு இந்தப்படத்தை வெளியிட அனுமதித்த தயாரிப்பாளருக்கும் இயக்குநர் வெற்றி மாறனுக்கும் நன்றி. இப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல திரைப்படம். இப்படத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி. இப்படத்தை ஊடகங்கள் ஆதரிக்க வேண்டும். நீங்கள...
