அனைவரும் பார்க்க வேண்டிய படம் “நெஞ்சுக்கு நீதி”!
தயாரிப்பாளர் போனி கபூர் வழங்கும், ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெயலர் வெளியீட்டு விழா இன்று திரைபிரபலங்கள்,
படக்குழுவினர் கலந்து கொள்ள கோலகலமாக நடைபெற்றது.
இவ்விழாவினில் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் கூறியதாவது...
நெஞ்சுக்கு நீதி அனைவரும் பார்க்க வேண்டிய படம், இந்த படத்தில் வேலை பார்த்தது பெருமை. படத்தில் நான்கு பாடல்கள். யுகபாரதி ஆழமான வரிகளை கொடுத்துள்ளார், அதற்கு நன்றி. இது எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்த படத்தில் பல விஷயங்களை பயன்படுத்தியுள்ளோம். என்னுடைய பாடல்களுக்கு நீங்கள் எப்போதும் வரவேற்பு கொடுத்துள்ளீர்...
