Thursday, October 1

Tag: next film of 2D Entertainment

2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த படம் பூஜையுடன் துவங்கியது!

2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த படம் பூஜையுடன் துவங்கியது!

News
தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் தரமான வெற்றிப்படங்களை தந்து வரும் 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த பட பூஜை, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் இன்று  காலை (நவம்பர் 28) மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. மிக வித்தியாசமான படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர்கள் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி கூட்டணியில் சூரி, கலையரசன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கிறார்கள். கிராமியப் பின்னணியில் உறவுகளின் வலிமையைச் உரக்கச்சொல்லும் விதமாக இந்தப் படம் உருவாகிறது. இயக்குநர் இரா.சரவணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்க, தமிழ்த் திரையுலகில் தனி முத்திரை பதித்து வரும் ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இளைய தலைமுறையின் நாடித்துடிப்புகளை தன் இசையால் கட்டிப் போட்டு வைத்திருக்கும் டி.இமான் இசை அமைக்க, தமிழ்த் திரையுலகின் முக்கிய படத் தொகுப...