தமிழ் திரைப்படத் துறை குறித்து தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் நடத்திய கருத்தரங்கம்!
'தமிழ் திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் வணிக வாய்ப்புகள்' என்ற தலைப்பில் சென்னையில் நடந்த நேருக்கு நேர் நிகழ்ச்சியில் முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆரக்கிள் மூவீஸ் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் (என்எஃப்டிசி) இயக்குநர் ராஜேஷ் கண்ணா, தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா, இயக்குநர்கள் தளபதி, சமந்த்ராஜ், அமுதேஸ்வர் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆரக்கிள் மூவீசின் தாய் நிறுவனமான என் எஃப் டி கிரியேட்டர் எகானமி பிரைவேட் லிமிடெட் மூலம் "தமிழ்த் திரைப்படத் துறையின் நிலை மற்றும் சாத்தியக்கூறுகள்" குறித்த ஆய்வுக்காக என்எஃப்டிசி நடத்தும் கருத்து கேட்பின் முன்னோட்டமாக இந்நிகழ்வு நடை...

