நட்சத்திர குடும்பத்திலிருந்து நடிக்க வரும் நாயகி நிஹாரிகா!
தெலுங்கு நட்சத்திர குடும்பத்திலிருந்து தமிழுக்கு வரும் நாயகி நிஹாரிகா !!
“மெட்ராஸ்காரன்” திரைப்படத்தில் ஷேன் நிகாம் ஜோடியாக இணைந்த தெலுங்கு நாயகி நிஹாரிகா !!
SR PRODUCTIONS சார்பில் B. ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன் இணைந்து நடிக்க, புதுமையான திரில்லர் டிராமாவாக உருவாகும் திரைப்படம் “மெட்ராஸ்காரன்” இப்படத்தில் தெலுங்கு நட்சத்திர குடும்பத்து நடிகை நிஹாரிகா இணைந்துள்ளார்.
தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து, தமிழுக்கு வந்திருக்கிறார் நாயகி நிஹாரிகா. தெலுங்கில் நாயகியாக அறிமுகமான நிஹாரிகா ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார். வெப் சீரிஸ்கள் என பல படைப்புகளை தயாரித்து வருகிறார்.
தற்போது தமிழில் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையா...
