Friday, October 23

Tag: nirav shah

வாட்ச்மேன் படம் மூலம் தமிழில் அறிமுகமாகும்  சம்யுக்தா ஹெக்டே

வாட்ச்மேன் படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் சம்யுக்தா ஹெக்டே

News
கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் மிகச்சிறந்த நடிப்பு என்பது அரிதிலும் அரிதான ஒரு கூட்டணி. தனது நடிப்பு திறமையை நிரூபித்த நடிகை சம்யுக்தா ஹெக்டே,இயற்கையாகவே இந்த வரத்தை பெற்றிருக்கிறார். இவர் ஏற்கனவே தென்னிந்திய ரசிகர்களை தனது நடிப்பால் ஈர்த்திருக்கிறார், குறிப்பாக கன்னட படமான கிரிக் பார்ட்டி படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். அவரது பப்பி படம் மிக வேகமாக உருவாகி வரும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகும் வாட்ச்மேன் படம் தமிழில் அவரின் முதல் படமாகியிருக்கிறது. ! இது குறித்து நடிகை சம்யுக்தா கூறும்போது, "நான் இந்த படத்தை பற்றி பேசுவதற்கு முன்னர், தமிழ் சினிமாவின் படைப்புகளை கண்டு வியந்திருக்கிறேன். கதை சொல்லல் ஆகட்டும் அல்லது தொழில்நுட்ப நுணுக்கங்கள் ஆகட்டும், தமிழ் சினிமா மிகச்சிறப்பாக இருக்கிறது. நான் தமிழ் சினிமாவில் 2-படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும்...
அஜித்தின் அடுத்த படம்…

அஜித்தின் அடுத்த படம்…

News
விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தை பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் எல் எல் பி என்கிற நிறுவனத்தின் சார்பில்  போனி கபூர்  தயாரிக்க, வினோத் குமார் இயக்க உள்ளார் என்பது அறிந்ததே. 2019 ஆம் ஆண்டின் கோடை விடுமுறையில் வெளியிட வேண்டும் என்கிற உத்வேகத்துடன் படப்பிடிப்பு குழுவினர் படத்தை துவக்க உள்ளனர் . ஒரு படத்தின் வெற்றிக்கு அந்த படத்தின் நடிக, நடிகையர் , தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் முக்கியம் என்று கூறுகிறார் தயாரிப்பாளர் போனி கபூர்.  அவர் மேலும் கூறியதாவது அஜித் குமாருடனான எனது நட்பு ,அவர் மறைந்த எனது மனைவி ஸ்ரீதேவியுடன் "இங்கிலீஷ் விங்கிலிஷ்" திரைப்படத்தில் நடிக்கும் போது தொடங்கியது. தனது தாய் மொழியான தமிழில் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்றும் அதில் அஜித் கதாநாயகனாக நடிக்க வேண்டும்  என்கிற தனது விருப்பத்தை அவர் எதேச்சையாக அஜித் குமார...