சிரபுஞ்சியில் படமாக்கிய ‘நோ என்ட்ரி’ பரபரப்பு திகில் படம்!
உலகில் அதிக மழை பெய்யும் இடமான மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியில் முதன் முதலில் முழுக்க முழுக்க ஒரு தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
படத்தின் பெயர் 'நோ என்ட்ரி' ஜம்போ சினிமாஸ் சார்பில் ஏ. ஸ்ரீதர் தயாரித்துள்ளார் .இவர் ஏற்கனவே 'நீயா2' தயாரித்துள்ளவர்.
ஆர்.அழகு கார்த்திக் இயக்கியுள்ளார். இவர் எஸ் .ஏ. சந்திரசேகரனிடம் சினிமா கற்றவர்.
பிரதான வேடம் ஏற்று நடித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.
படத்தைப் பற்றி இயக்குநர் கூறும்போது,
"மனித நடமாட்டம் இல்லாத ஒரு மலைப்பிரதேசத்தில் ஒரு சொகுசு இடத்தில் தங்குகிறார்கள் இளம் தம்பதிகள் .அங்கே மனிதர்களை வேட்டையாடும் 15 நாய்களிடம் அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த நாய்கள் பத்து சேர்ந்தால் ஒரு யானையையே வீழ்த்திக் கொன்று விடுமளவுக்குக் கொடூரமானவை. நர வேட்டையாடும் நாய்களிடமிருந்து தம்பதிகள் தப்பித்தார்களா இல்லையா என்பதைப் பரபரப்பாகவும்...
