ஜான்வி கபூர் சைஃப் அலி கான் அறிமுகமாகும் ‘தேவாரா’!
'என்டிஆர் 30' படத்திற்கு 'தேவாரா' என்று பெயர் வைத்து, அவரின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் பார்வையை என்டிஆர் வெளியிட்டுள்ளார்!
'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் உலகளாவிய வெற்றிக்குப் பிறகு, என்டிஆர் தற்போது தனது ஜனதா கேரேஜ் இயக்குநரான கொரடலா சிவாவுடன் 'என்டிஆர் 30' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் மூலம் தெலுங்கில் ஜான்வி கபூர் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோர் அறிமுகமாகின்றனர். இதில் சைஃப் அலிகான் வில்லனாக நடிக்கிறார். இந்த ஆண்டு, என்டிஆர் பிறந்தநாள் அவரது தீவிர ரசிகர்களுக்கு இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாக மாறியது. ஏனெனில், 'என்டிஆர் 30' படத்தின் முதல் பார்வை போஸ்டரை அவரே இன்று வெளியிட்டார்.
இந்த போஸ்டரில் லுங்கி அணிந்த என்டிஆர் கையில் பெரிய ஆயுதத்துடன் தீவிரமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. அடர் கருமை நிறத்திலான இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் என்டிஆர் ஒரு மூர்க்கமான அவதாரத்தில...
