Friday, October 23

Tag: OdaVittuSudalama

100 திரைப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ள ‘ஓட விட்டு சுடலாமா’ படத்தின் பாடல்!

100 திரைப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ள ‘ஓட விட்டு சுடலாமா’ படத்தின் பாடல்!

News
இதுவரை திரையுலகம் காணாத புதுமையாகவும் குறிப்பிடத்தக்க சாதனையாகவும் ஒரு படத்தின் பாடலை தமிழ் மற்றும் மலையாள மொழிகளின் நூறு திரையுலகப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ளனர்.எம்.வி.ஜிஜேஷ் இயக்கியுள்ள 'ஓடவிட்டு சுடலாமா 'என்கிற படத்தில் இடம்பெறும் ' டீக்கடை வீட்டிலே பொண்ணு' என்கிற பாடல் வீடியோவைத் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் எஸ். ஏ. சந்திரசேகரன், கே. பாக்யராஜ், பேரரசு,சிபி மலையில், லால்,திரைக்கலைஞர்கள் ,அஜ்மல், பிருத்திவிராஜ்,உன்னி முகுந்தன், ரேச்சல் ஜேக்கப் நோலா, ஆன்டோ ஜோசப், சாய்ஜு குருப் போன்ற நூற்றுக்கு மேற்பட்ட தமிழ், மலையாளத் திரையுலகப் பிரபலங்கள் தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வாழ்த்தி உள்ளார்கள். ஒரு திரைப்படத்தின் பாடல் வீடியோவை இத்தனைப் பேர் வெளியிட்டது இதுவே முதல் முறையாக இருக்கும் என்று கூறலாம். இந்தப் பாடல் வெளியான தினத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 'படத்தின் வெ...