Friday, October 23

Tag: Oh My Kadavule

ரசிகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்லும் ஒ மை கடவுளே!

ரசிகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்லும் ஒ மை கடவுளே!

News
இளமை ததும்பும் காதல், இளைஞர்களின் நவீன வாழ்வியல் என அசோக் செல்வன்,  ரித்திகா சிங் நடிப்பில், டிரெய்லரிலேயே பரபரப்பை கிளப்பியிருக்கிறது “ஓ மை கடவுளே” படம். டிரெய்லர் வெளியான குறுகிய காலத்தில் 2.5 மில்லியன் பார்வைகளை YouTube தளத்தில் கடந்து, பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், பிப்ரவரி 14 படம் வெளியாகவுள்ளது. படம்  குறித்து நடிகர் அசோக் செல்வன் கூறியதாவது... உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் இத்தனை பெரிய  வரவேற்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இக்கதை திரைக்கதை மீது மிகப்பெரும் நம்பிக்கை இருந்தது. எங்கள் திரை வடிவம் அனைவரையும் கவரும் என்று நம்பினோம் ஆனால் ரசிகர்களின் இத்தகைய பிரமாண்ட வரவேற்பு எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டது. “ஓ மை கடவுளே”  படத்தில்  கதையின் பின்னிருக்கும் ரகசியம், கொஞ்சமேனும் மாற்றி, வித்தியாசமாக யோசிக்கலாமே எனும் சிறு பொறி தான். நாம் கண்ட...
“ஓ மை கடவுளே” – ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு – ரித்திகா சிங் ! 

“ஓ மை கடவுளே” – ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு – ரித்திகா சிங் ! 

News
முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகையானவர் ரித்திகா சிங். மிகக் கவனமுடன் தன் மனதிற்கு நெருங்கிய கதாப்பாத்திரங்களை மட்டுமே செய்து வருகிறார். சிறு இடைவெளிக்கு பிறகு தமிழில், அவர் நடிப்பில்,  பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகும் “ஓ மை கடவுளே” படம் ரசிகர்களிடம் பலத்த  வரவேற்பு பெற்றிருப்பதில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார். படம் குறித்து நடிகை ரித்திகா சிங் பகிர்ந்து கொண்டதாவது... “ஓ மை கடவுளே” என் வாழ்வில் ஸ்பெஷலான படம். 3 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வந்திருக்கிறேன். மனதிற்கு பிடித்த நல்ல கதாப்பத்திரங்கள் மட்டுமே செய்வது என்கிற முடிவில் இருந்தேன். இந்தப்படத்தின் கதை கேட்டபோது இது எனக்கு கிடைத்த தங்கவாய்ப்பாக தோன்றியது. இக்கதையில் முதலில் என்னை ஈர்த்த விசயம், நாயகி ஒரு கிறிஸ்த்துவ மணப்பெண்ணாக வருவது தான். என் நெடுநாளைய சிறு வயது கனவு அத...
“வித்தியாசமான படங்கள் எடுக்க வேண்டும்” – தயாரிப்பாளர் டில்லிபாபு

“வித்தியாசமான படங்கள் எடுக்க வேண்டும்” – தயாரிப்பாளர் டில்லிபாபு

News
எல்லோருடமும் இளமை மாறாத ஒரே உணர்வு காதல். தமிழ் சினிமாவில் காதல் படங்களே வராதா ஏக்கத்தை போக்க, இளமை பொங்கும் படைப்பாக,  தற்கால நவீன இளைஞரகளின் வாழ்வை அழகாய் சொல்லும் படமாக வருகிறது “ஓ மை கடவுளே”. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் பத்திரைக்கையாளர் சந்திப்பு  நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் அபிநயா செல்வம் பேசியது... நானும் தம்பி அசோக்கும் சிறுவயதில் இருந்தே நிறைய சேட்டைகள் செய்திருக்கிறோம். அவனுடைய கிரஷ்ஷிடம் எப்படி பேச வேண்டும் என்று கூட அவனுக்கு சொல்லி தந்துள்ளேன். என் வாழ்வில் எப்போதும் உடனிருப்பவன். அவனுடன் இந்தப்படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் எங்கள் வாழ்வில் முக்கியமான படம். அனைவருக்கும் பிடிக்ககூடிய படமாக எடுத்திருக்கிறோம். பார்த்துவிட்டு சொல்லுங்கள் நன்றி. நிர்வாக தயாரிப்பாளர் நோவா பேசியது.... சினிமாவில் ஜெயிக்கும் அதே நேரம்  மனதுக...
“ஓ மை கடவுளே” படத்தில் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றம் ! 

“ஓ மை கடவுளே” படத்தில் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றம் ! 

News
காதல் கதைகள் என்றும் அழியா தன்மை கொண்டது. உலகில் எந்த மூலையிலும் வசிக்கும் எவரும் காதல் கதைகளை தன்னுடன் எளிதில் தொடர்பு படுத்தி கொள்வார்கள். எத்தனை காலம் கடந்தாலும் காதல் கதைகள் ஜெயித்து கொண்டே இருக்கும். மனிதன் உள்ளவரை காதலும் அழியாது. திரையில் சரியான விதத்தில் சொல்லப்படும் காதல் கதைக்கு மவுசு எப்போதும் அதிகம். அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் “ஓ மை கடவுளே” இன்றைய நவ நாகரீக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்கிறது. இப்படத்தின் டீஸர், புரமோ பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திரங்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது. ஏற்கனவே விஜய்சேதுபதி இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்கிற நிலையில்,  இப்போது அடுத்த ஆச்சர்யமாக, இயக்குநர் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் எனும் செய்தி, ரசிகர்களை உற்சாகம் கொ...
‘ஓ மை கடவுளே’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!

‘ஓ மை கடவுளே’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!

News
நகைச்சுவை கலந்த காதல் சித்திரமான 'ஓ மை கடவுளே' தென்றல் காற்றைப்போல் மனதுக்கு இதமான அனுபவத்தைத் தரத் தயாராகிறது. அசோக் செல்வன் ரித்விகா சிங் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தின் டீஸர் வெகுஜன ரசனைக்கேற்ப அமைந்து அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்பு இப்போது முழுமையாக நிறைவடைந்திருக்கிறது. ஆக்ஸஸ் பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் டில்லிபாபு இது பற்றி கூறுகையில் "ஓ மை கடவுளே படத்தில் பங்கு பெற்ற துடிப்பு மிக்க இளைஞர் குழு துவக்கத்திலிருந்தே என்னை திருப்திபடுத்தத் தவறவில்லை. இயக்குநர் அஸ்வத்தின் புதுமையான கதை சொல்லும் முறையாகட்டும், அல்லது டீஸரில் தென்பட்ட பிரதான பாத்திரங்களான அசோக் செல்வன், ரித்விகா சிங் மற்றும் வாணி போஜனின் நளினமானமாகட்டும் அனைத்தும் நேர்மறையாகவே அமைந்திருக்கின்றன. ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ...

மில்லியன் பார்வைகளை கடந்த “ஓ மை கடவுளே” டீஸர் !

News
  காதல் எக்காலத்திலும் மாறாத உணர்வு. எப்போதும் உலகின் ஆதாரமாக, புதுமையாக உலகின் இயக்கமாக  இருப்பது காதல் தான். சினிமாவில்  எக்காலத்திலும் காதல் கதைகளுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.  தமிழில் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஃபிரஷ்ஷான, இளமை ததும்பும் காதல் கதையாக உருவாகியுள்ளது “ஓ மை கடவுளே” படம். அசோக் செல்வன், ரித்திகா சிங் இணைந்து நடிக்கும். இத்திரைப்படம் இதில் இணைந்திருக்கும் மற்ற நடிகர் பட்டாளத்தால் மேலும் மேலும் எதிர்பார்ப்பை  குவித்து வருகிறது. இளைஞர்கள் விரும்பும் வாணி போஜன், சாரா இணைந்திருக்கும் இப்படத்தில்  அனைவரையும்  ஆச்சர்யப்படுத்தும் விதமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.    காதல் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்தின் டீஸர்  சமீபத்தில் வெளியாகி,  ரசிகர்களிடம் பெரும் வ...
“ஒ மை கடவுளே” படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி!

“ஒ மை கடவுளே” படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி!

News
பெயர் அறிவிக்கப்பட்டதலிருந்தே எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் படைப்பாக இருக்கிறது “ஓ மை கடவுளே” படம்.  அசோக் செல்வன், ரித்திகா சிங் இணைந்து நடிக்கும் இந்தத்  திரைப்படம் இதில் இணைந்திருக்கும் மற்ற நடிகர் பட்டாளத்தால் மேலும் மேலும் எதிர்பார்ப்பை குவித்து வருகிறது. இளைஞர்கள் விரும்பும் வாணி போஜன், சாரா இணைந்திருக்கும் இப்படத்தில் அனைவரையும்  ஆச்சர்யப்படுத்தும் விதமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருக்கிறார். ஒரு சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் அவர் நடித்துள்ளார். இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இது பற்றி கூறியதாவது... சிறப்புத் தோற்றம் என்பதை விட என்னைப் பொறுத்தவரை இது படத்தை மாற்றும் முக்கிய கதாபாத்திரம் என்பேன். அவர் படத்தி வரும் நேரம்  படத்தின் முக்கியமான கட்டமாக, படத்தை அடுத்த உயரத்துக்கு எடுத்துச் செல்வதாக   இருக்கும். திரைக்கதை முடிக்கப்பட்டு முக்கிய நடிக...